Thursday, May 01, 2008

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன்!


அம்மையார் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் முன்னும் பின்னும் பொருத்தமான சொற்களைக் கூட்டிக் குறைத்துப் பாடும் போது 'ஆகா. அது தரும் ஆனந்தமே ஆனந்தம்'. இந்தப் பாடலும் அப்படியே. அம்மையார் கே.பி.சுந்தராம்பாள் பாடுவதைக் கேட்டுப் பாருங்கள்.

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன் - என்னைக்
காப்பதுன் கடமையையா பழனிக் (கந்தா)

சிந்தையில் விளையாடும் தேவாதிதேவனே
இந்தா என்று நல்வரம் ஈந்தருளும் கருணைக் (கந்தா)பந்த பாசங்களில் என் சிந்தனை செல்லாமல்
பக்குவ நிலை அருள் சொக்கநாதன் மகனே
சந்தோசம் தந்திடும் சண்முகனே குகனே
தந்தைக்குபதேசம் செய்த சுவாமிநாதனே (கந்தா)

18 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) May 01, 2008 5:56 PM  

ஆகா
ஜிராவுடன் சென்னையில் வடபழனி தரிசனம்
குமரனுடன் பதிவில் தென்பழனி தரிசன்மா?

எளியனுக்கு ஏற்ற எளிய பாடல்!
//பக்குவ நிலை அருள் சொக்கநாதன் மகனே//
எதுகையும் எளிமை! :-)

ஜீவா (Jeeva Venkataraman) May 01, 2008 9:39 PM  

நல்ல பாடல் அறிகுகத்திற்கு நன்றி குமரன்.

மதுரையம்பதி May 01, 2008 10:19 PM  

சூப்பர் பாட்டாயிருக்கே....

ரெண்டுநாளா எனக்கு கந்தனருள் முன்னிற்குது...கே.ஆர்.எஸ் புண்ணியத்துல முந்தாநாள் கந்தனருள், இன்று உங்க புண்ணியத்துல கந்தனருள். நன்றி குமரன்.....

உண்மைத் தமிழன்(15270788164745573644) May 02, 2008 6:00 AM  

கந்தனருள் வேண்டி வந்திருக்கிறேன்..

எத்தனைப் பதிவுகள் போட்டு கந்தனைத் தொழுதாலும் அலுப்பதற்கில்லை.

கந்தனின் பதிவுகளைப் பார்த்துத்தான் புன்னகையே வருகிறது.

கந்தா.. கடம்பா.. கதிர்வேலா..

எதுவாயிருந்தாலும் எனக்கு அருள் செய்..

kumar May 02, 2008 10:07 AM  

வணக்கம்
அருமையான படல்.
எப்படி பாடினரோ
அடியார்
அப்படி பாட ஆசை கொண்டேன் குமரா!

ஜீவி May 03, 2008 4:39 AM  

முருகா!
கந்தா!
குமரா!
கடம்பா!
கார்த்திகேயா!
கதிர்வேலா!
வேலவா!
வேலெடுத்து வீசிக்காட்டி வீரர் மறபைத் தோற்றுவித்த வள்ளலே!
அப்பா, செந்தில்வாழ் செல்வா!
அறுபடை வீடு கொண்டோனே!
--எப்படி வேண்டுமானாலும் அந்த அழகனை அழைத்துப் பாருங்கள்; உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்;
துன்பங்களெலாம் விலகி ஓடும்.
அருமையான பதிவிற்கு அன்பான
வாழ்த்துக்கள், குமரன்!

G.Ragavan May 03, 2008 4:49 AM  

மிகவும் நல்ல பாடல். பக்திச் சுடர் கே.பி.சுந்தராம்பாள் பாடி முருகன் பாடல் கேட்பது என்பது பெருமகிழ்ச்சியே. பாடலைத் தேடிக் கொடுத்த குமரனுக்கு நன்றி.

குமரன் (Kumaran) May 04, 2008 7:02 PM  

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் இந்தப் பாடலைக் கேட்டு பதிவிட சேமித்து வைத்திருந்தேன் இரவிசங்கர். அப்படி சேமித்தவற்றை இடலாம் என்று பார்த்துக் கொண்டு வந்ததில் இது முதலில் கிடைத்தது. இட்டேன். உங்களுக்கும் இராகவனுடன் இணைந்து வடபழனியாண்டவரைத் தரிசித்த நினைவைத் தந்துவிட்டது.

கீதா சாம்பசிவம் May 05, 2008 6:38 AM  

அதானா மதுரையம்பதி முருகனருள் கிடைச்சதுனு ஸ்டேடஸ் மெசேஜ் கொடுத்துட்டே இருக்கார்?? நமக்கெல்லாம் கிடைக்கும் இல்லை? :P

குமரன் (Kumaran) May 06, 2008 7:25 AM  

மகிழ்ச்சி ஜீவா. நன்றி.

குமரன் (Kumaran) May 06, 2008 7:26 AM  

இனி அடிக்கடி முருகனருள் முன்னிற்கும் என்று நம்பலாம் மௌலி. இரவிசங்கர் ஊருக்குப் போய் வந்தாச்சு. திராச எங்கிருந்தாலும் கிருத்திகைக்கு இங்கே இருக்காரு. அப்புறம் என்ன குறை? :-)

குமரன் (Kumaran) May 06, 2008 7:28 AM  

உண்மைத் தமிழரே. தமிழால் திட்டினாலும் அருள்பவன் உண்மைத் தமிழருக்கு அருளாமல் போய்விடுவானா என்ன? :-)

குமரன் (Kumaran) May 06, 2008 7:29 AM  

உண்மை குமார். அடியார் பாடிய வகையே பாடி மகிழ்வுறச் செய்வோம்; மகிழ்வோம்.

குமரன் (Kumaran) May 06, 2008 7:29 AM  

மிக்க நன்றி ஜீவி ஐயா.

குமரன் (Kumaran) May 06, 2008 7:30 AM  

மகிழ்ச்சி இராகவன். நன்றி.

குமரன் (Kumaran) May 06, 2008 7:31 AM  

அப்பனைப் பற்றியும் மாமனைப் பற்றியும் தொடர்ந்து எழுதும் உங்களுக்கு முருகனருள் கிட்டாவிட்டால் வேறுயாருக்குக் கிட்டும் கீதாம்மா? :-)

chandra July 05, 2008 1:21 PM  

The tamil script does not come clearly. Very difficult to read. ny suggesstion

Can you get the book by TV Venkatraman IAS on tirumandira virundu

email: chandraiitm@gmail.com

குமரன் (Kumaran) July 15, 2008 12:43 PM  

தங்களுக்கு ஏன் தமிழ் எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை என்று தெரியவில்லை திரு.சந்திரா. உலாவியின் குறையாக இருக்கலாம்.

திருமந்திர விருந்து நூல் எங்கே கிடைக்கும்?

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP