Saturday, May 24, 2008

What more can I ask My Dear Muruga!!!Thanks: myrachi, Youtube

Thursday, May 22, 2008

"ஜி.ரா.வின் காவடிச் சிந்து"

நண்பர் 'ஜி.ரா.' எழுதிய காவடிச் சிந்தை இங்கு பாடியிருக்கிறேன்!
எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்களே!


Get this widget Track details eSnips Social DNA

Sunday, May 18, 2008

Happy Birthday முருகா! - ஆறு முருகன்களின் காட்சி!

வைகாசி பொறந்தாச்சு! மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?
இன்று வைகாசி விசாகம் (May 19, 2008)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு? - சைவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! வைணவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! இப்படி ஒரு இனிய சைவ-வைணவ ஒற்றுமை!

வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்! இறைவன் திருவடிகளின் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்! அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் இன்னொரு அழகன். அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாருமே அழகா இருப்பாங்களா-ன்னு கேக்கறீங்களா? ஜோதிட விற்பன்னர்கள் யாராச்சும் சொல்லுங்கப்பா!)

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வு அருள் பெருமாளே!

என்று அருணகிரியும் இவனை "விசாகன்" என்றே கொண்டாடுகிறார்! அவன் தான் விசாகன் என்னும் முருகன்! அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!

So....
Happy Birthday, Dear Muruga! :-)
முருகா, உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
என்று முருகனுக்கு பிறப்பிறப்புகள் கிடையாது என்று சொல்லுவார்கள்!

பொதுவாகவே கந்தக் கடவுளுக்கு மட்டுமில்லை, எந்தக் கடவுளுக்குமே பிறப்பிறப்புகள் கிடையாது! - இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுவது எல்லாம் மனிதனாய் கீழறங்கி வரும் அவதாரங்களுக்கு மட்டுமே! கிறிஸ்துமஸும் அப்படியே! மத்தபடி ஆதியும் அந்தமும் இல்லா இறைவனுக்கு ஏது பிறப்பும் இறப்பும்?

பிறவான்-னு என்ன தான் அருணகிரியார் சொன்னாலும், நாம அன்பா Happy Birthday-ன்னு முருகனுக்குச் சொல்லுறதை அவரும் தடுப்பாரா என்ன?
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! அதனால் பிறந்தநாள் பரிசு வைத்தேன்! :-)கந்தன் கருணை படத்தில் மிக அழகான ஒரு காட்சி! ஒரு முருகனைப் பார்த்தாலே அழகு கொஞ்சும்! ஒரு சேர, ஆறு முருகன்களைப் பார்த்தால்?
கள்ளமில்லாச் சிரிப்பு சிரிக்கும் ஆறு முருகன்களைக் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்க்கும் காட்சி!

ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே!

என்பது தான் திருப்புகழ்...
அதைத் திரைப்படத்துக்காகச் சற்றே மாற்றி...மிக அழகாக இசை அமைத்திருக்காங்க! சூலமங்கலம் சகோதரிகள், மற்றும் ஜமுனாராணி போன்ற மற்ற பாடகிகள் சேர்ந்து பாடறாங்க!
(கந்த சஷ்டிக் கவசம்-னா சூலமங்கலம் பாடித் தான் கேட்கணும் என்ற அளவுக்கு, சூலமங்கலம் சகோதரிகள் புகழல்லவா!)
பாடலை இங்கு கேளுங்க! வீடியோவில் ஆறு முருகன்களையும் ஒரு சேரப் பார்த்து மகிழுங்க!ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்


காலமகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க!
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க!
(ஆறுமுகமான)

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தண் நிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று


பால் மனமும் பூ மனமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று


வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று

(ஆறுமுகமான)

படம்: கந்தன் கருணை
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்

வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து

எந்தவேளையும் கந்தவேளைத் தொழுவோர்க்கும் சொந்தவேளை என்ற ஒன்றே இல்லாதவர்க்கும் நாளும் கிழமையும் ஒன்றே. அப்படியிருப்பினும் ஒருவேளையாவது இறைவனின் திருவேளை என்றுண்ணி வாழ்கின்ற பேர்களுக்கு அவ்வேளையும் செவ்வேளையாக வாழ்த்துவோமாக. அவ்வகையில் வைகாசி விசாகத் திருநாளாகிய இன்று தமிழ்வேளைத் தொழுது இவ்வேளையைத் தமிழ் வேளை என்று ஆக்கும் பெருமையை வேண்டுவதே சிறப்பாகும்.

கண்டோரும் விண்டோரும் சொல்லில் பொருளில் இறைவனைப் பாடிய வேளையில் அன்புண்டோரும் பாடலாம். இறைவன் அருளினைக் கூடலாம் என்ற கருத்தினை ஒப்புக் கொண்டு செம்மொழியும் நல்லன்பும் மட்டுமே உளத்தில் நிறுத்தி முருகன் அருளால் செய்த பாடல் இது. காவடிச் சிந்து மெட்டில். பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த இந்த விளையாட்டுச் சிந்தினைச் செந்திலை நினைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்

புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்


இந்தப் பாடலை அன்பர்களோ நண்பர்களோ பாடித் தந்தால் மிகவும் மகிழ்வேன்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Friday, May 16, 2008

சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்....


சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்
ஒருமுகமாய் தரும் அருள் ஒன்றே (சண்முக)

சிவனார் கண்பொறியில் வந்துதித்த சரவணன்
சிக்கல் சிங்கார வேலனாம் ஆறுமுகன்
சிறைதனில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணன்
சின்னிக் கிருஷ்ணனாய் தோன்றும் குருவாயூரப்பன் (மோகன)

வேலினை ஏந்திடும் வண்ண மயில் வாகனன்
வள்ளி தெய்வானையை மணந்த வேல்முருகன்
சூரசம்ஹாரம் செய்த சக்திவடிவேலன்
பிரணவம் எடுத்துரைத்த சுவாமிநாதன்
வேய்ங்குழல் ஊதிடும் வேணுகோபாலன்
பாங்குடனே பாமை ருக்மிணியை மணந்த மாயவன்
கம்சனை வதம் செய்த கார்மேக வண்ணன்
கீதோபதேசம் செய்த சாரங்கன்

சரவணன் நின்ற மலையது பழமுதிர்ச்சோலை
அரங்கன் உறையும் எழில்வனமது மாலிருஞ்சோலை
அருணகிரிக்கருளி திருப்புகழைப் பாடவைத்த குகன்
ஆழ்வார் திவ்யப்ரபந்தமதில் எழுந்தருளிய நம்பி

ஷடாக்ஷரம் கொண்டவன் சரவணபவ குகனாம்
அஷ்டாக்ஷரம் கொண்டவன் ஓம் நமோ நாராயணனாம்
குன்றாடிய குருபரா வேங்கட மலையின் எழிலுருவே
பழனி நின்ற பழமே கோகுல பாலா கோபாலா (மோகன)


***

முருகன் திருவுருவப்படம் பெற்றது திரு.கானா பிரபாவின் பதிவிலிருந்து. பெருமாள் திருவுருவப்படம் பெற்றது திரு.கைலாஷி பதிவிலிருந்து. இருவருக்கும் எனது நன்றிகள்.

Monday, May 05, 2008

எனது உயிர் நீ முருகாஏழைக்கருள்தென் பழனி வாழ் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா

கிருத்திகை முருகனுக்கு உகந்தநாள்.அதுவும் முருகனுக்குரிய செவ்வாயன்று வரும் சிறப்புநாள் முருகனை பணிந்து அவன் பாடலைக் கேட்டு பார்த்து ரசிப்போம். அலுவல் நிமித்தமாக சுற்றுபயணத்தில் இருப்பதால் இருக்கும் வசதியைக் கொண்டு இடப்பட்ட பதிவு.குறை பொறுத்து நிறையை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ராகம்:- கல்யாணி தாளம்:-
ஆதி
பல்லவி

எனது உயிர் நீ முருகாஏழைக்கருள் செய்ய வா

அனுபல்லவி

இணையடி வேண்டி தினம் தொழும் அடிமை நான்

சரணம்

அழகு வடியும் ஆறுமுகனே

அன்னை உமையவளின் அருமை மகனே

கழனி மலர்காசுல் கந்த மறைஒதும்

பழனிமலை மீதமர் கந்தா பரிசோதனை போதும்

இந்தப்பாடல் மறைந்த பாடகர் திரு. கல்யாணராமன் இயற்றி மெட்டமைத்து பாடியது

-

Thursday, May 01, 2008

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன்!


அம்மையார் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் முன்னும் பின்னும் பொருத்தமான சொற்களைக் கூட்டிக் குறைத்துப் பாடும் போது 'ஆகா. அது தரும் ஆனந்தமே ஆனந்தம்'. இந்தப் பாடலும் அப்படியே. அம்மையார் கே.பி.சுந்தராம்பாள் பாடுவதைக் கேட்டுப் பாருங்கள்.

கந்தா உன்னை நான் வந்தடைந்தேன் - என்னைக்
காப்பதுன் கடமையையா பழனிக் (கந்தா)

சிந்தையில் விளையாடும் தேவாதிதேவனே
இந்தா என்று நல்வரம் ஈந்தருளும் கருணைக் (கந்தா)பந்த பாசங்களில் என் சிந்தனை செல்லாமல்
பக்குவ நிலை அருள் சொக்கநாதன் மகனே
சந்தோசம் தந்திடும் சண்முகனே குகனே
தந்தைக்குபதேசம் செய்த சுவாமிநாதனே (கந்தா)

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP