Friday, May 18, 2007

கந்தன் காலடியை வணங்கினால்...!



கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்


கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள் !


பாடல்: கந்தன் காலடியை வணங்கினால்
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்


நன்றி : கோ.கணேஷ்
துள்ளலான இசையோடு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல் இது.

8 comments:

G.Ragavan May 18, 2007 4:27 PM  

இந்தப் பாடலுக்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் என்று நினைக்கிறேன். மிகவும் அருமையானதொரு பாடலை நினைவுபடுத்தியிருக்கின்றீர்கள்.

அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய் என்று அருணகிரி சொன்னதை நினைவு படுத்தும் பாடல். ஏழிசை வேந்தரின் குரலில் மிகவும் இனிமையான பாடல்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) May 18, 2007 7:36 PM  

அருமையான பாடல், ராகவன் கூறுவது போல் குன்னக்குடியாரின் இசை, தேவர் படமாக இருக்கவேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) May 18, 2007 10:06 PM  

சிபி
படம் அழகோ அழகு! அதுவும் மடி மேல் அப்படி ஒரு கம்பீரம்!

இந்த ஒரு பாட்டால், முருகனருள் வலைப்பூவில் எல்லாத் தெய்வங்களும் வந்து விட்டார்கள்.

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் என்று இரண்டு முறை அழுத்திப் பாடுவார் டி.எம்.எஸ்.
அந்த இடம் நான் மிகவும் அனுபவித்து ரசிக்கும் இடம்!

நாமக்கல் சிபி May 19, 2007 2:47 AM  

//இந்த ஒரு பாட்டால், முருகனருள் வலைப்பூவில் எல்லாத் தெய்வங்களும் வந்து விட்டார்கள்//

பின்னே! கந்தனை நாடி அடிய்வர்கள் மட்டும்தான் வரவேண்டுமா என்ன?

அவனழகு அனைவரையும் அவனை நாடவைக்கும் அல்லவா?

நாமக்கல் சிபி May 19, 2007 2:50 AM  

//கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள் என்று இரண்டு முறை அழுத்திப் பாடுவார் டி.எம்.எஸ்.
அந்த இடம் நான் மிகவும் அனுபவித்து ரசிக்கும் இடம்!
//

கே.ஆர்.எஸ் எனக்கும் பிடித்த வரிகள் அவை! அதனால்தான் நானும் அழுத்திப் பதிவிட்டிருக்கிறேன் அவ்வரிகளை!

:)

ச.சங்கர் May 19, 2007 3:58 AM  

சிபி

படம் அறுமை...புன்னகை தவழுகின்ற சிவனும்..முருகனும்..அடடா சூப்பர்.

தி. ரா. ச.(T.R.C.) May 19, 2007 10:34 AM  

நன்றி சிபி. யாருடைய பாடல் இது.டி எம் ஸ் அனுபவித்துப்பாடியது.

ஷைலஜா May 19, 2007 12:15 PM  

அருமையான அர்த்தம் பொதிந்த பாடல்..முருகன் கோயில் உத்திரவிழாவில் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்..நன்றி சிபி இங்கே அளித்ததற்கு

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP