Friday, March 30, 2007

வா... முருகா... வா... வடிவழகா வா...


முருகனைப் பற்றிய பல பாடல்கள் இருந்தாலும் குறிப்பாக இந்தப் பாடல் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது ஏன் என்றால் அதற்கு காரணம் இரண்டு. ஒன்று இதை இயற்றியவர் மறைந்த என் நண்பர் திரு.' ஸ்பென்சர்' வேணுகோபால். மற்றொன்று மனதை மயக்கும் தமிழின் இனிமை.தமிழ்க்கடவுளான முருகனுக்கு அவர் அளித்த தமிழ்ச்சொல் மாலை இது.இந்தப் பாடலை கேட்ட பின்பும் அந்த முருகனுக்கு வர மனமில்லாமல்தான் இருக்குமா? அல்லது வரம் தரத்தான் மன்மில்லாமல் இருக்குமா?

இந்தப் பாடலுக்கு அமைத்திட்ட ராகமோ 'பேகடா' தாளமோ ருபகம்
பல்லவி

வா முருகா வா வடிவழகா ஷண்முகா வா வா (முருகா வா)

அனுபல்லவி

மாமறைப் பொருளே நீ வா வரையில்லாத அருளே வா
தேமதுரச் சுவையே வா தீரா என் வினை தீராய் வா .........(வா முருகா)

சரணம்

செய்தவப்பயனே சிவகுரு தெய்வமே நீ வா
சீலனே சிவகாமி பாலனே ஸ்ரீவள்ளிலோலனே வா
பொய்கைதரு மெய்ப்பொருளே போதஞான வேத சுடரே வா
புண்யதீன சரண்ய திவ்ய லாவண்ய ஸ்ரீசுப்ரமண்ய காருண்யா வா (வா )
(வா முருகா)
திருமதி எம்.எல். வஸந்தகுமாரி பாடிய படலைக் கேட்க இங்கே'><"கிளிக்"> செய்யவும்

19 comments:

குமரன் (Kumaran) March 30, 2007 5:41 PM  

மிக அருமையான பாடல் தி.ரா.ச. முதன்முறையாகக் கேட்டேன் இந்தப் பாடலை. ஒவ்வொரு சொல்லும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) March 30, 2007 11:54 PM  

ஆமாம் குமரன். இது அதிகம் பாடப்படாத ஆனால் மிக அருமையான பாடல்.அதுவும் அந்தக் கடைசி வரி அபராம்.புண்ய தீன சரண்ய திவ்ய லாவண்ய ஸ்ரீசுப்ரமண்ய காருண்ய வா வா முருகா.இதை திரு டி.கே. ஜெயராமன் அவர்களும் பாடுவார்கள்

வல்லிசிம்ஹன் March 31, 2007 7:37 AM  

t.r.c.
a beautiful choice of murugan paatu.
m.l.v kettu naLaacu.
nandri.

நாமக்கல் சிபி March 31, 2007 10:28 AM  

அருமையான பாடல் தி.ரா.ச அவர்களே!

அபூர்வமான பாடலைப் பதிவு செய்தமைக்கு நன்றி!

கானா பிரபா March 31, 2007 10:56 AM  

நாம் வாழும் சிட்னி மண்ணில் முருகன் தேரில் ஏறிப் பவனி வந்த நாளில் உங்கள் பதிவும் மனதை நிறைக்கின்றது.

இலவசக்கொத்தனார் March 31, 2007 11:05 AM  

ரொம்ப நல்ல பாடல். அதிகம் பேர் பாடறது இல்லை. பேகடாவும் பக்தி ராகம்தான், குழையக் குழையப் பாடினால் குமரன் வரத்தான் வருவான்.

நன்றி ஐயா.

kannabiran, RAVI SHANKAR (KRS) March 31, 2007 10:45 PM  

பேகடா ராகத்தில் வாங்கடா என்று
வா, வா, வா என்று அப்படியே முருகனின் கையைப் பிடித்து இழுத்து வந்து விடுவது போல் இருக்கிறது பாடல்.

இது போன்று வெளியில் அவ்வளவாக பிரபலமாகாத பாடல்களையும் நிறையத் தாருங்கள் திராச ஐயா!

தி. ரா. ச.(T.R.C.) April 01, 2007 5:20 AM  

வல்லியம்மா வணக்கம்.எம்.எல்.வி அவர்கள் சினிமா இசையிலும் கர்நாடக இசையிலும் ஒரே நேரத்தில்
கொடிகட்டிப் பறந்தார்.இந்தப் பாடலை அழகாக அளித்துள்ளார்

தி. ரா. ச.(T.R.C.) April 01, 2007 5:22 AM  

சிபி இந்தப் பாடலை எழுதிய வேணுகோபாலும் ஒரு அற்புதமான மனிதர்தான்

தி. ரா. ச.(T.R.C.) April 01, 2007 5:25 AM  

வா முருகா வா என்று உருகி அழைத்தால் சிட்னி என்ன உலக்த்தில் எந்த மூலையில் இருந்தாலும் முருகன் ஓடோடி வருவான்.நன்றி கானா.பிரபு. தங்களை செல்லியின் பதிவில் படித்துள்ளேன். இங்கு வந்ததற்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) April 01, 2007 5:28 AM  

இலவசம் குழையக் குழைய பாடாமலே குமரன் ஏற்கனவே வந்தாச்சு.இப்பொழுது உள்ள வித்துவான்கள் இந்த மாதிரி பாடல்களைப் பாடுவதே இல்லை

தி. ரா. ச.(T.R.C.) April 01, 2007 5:34 AM  

ரவி நீங்கள் சொல்வதுபோல் இது போன்ற பாடல்கள் நிறைய உள்ளது. திருமதி. தாரா எனபவ்ர் அழகான தமிழில் எளிமையாக புரியும்படி பல பாடல்களைப் பாடியுள்ளார்.உதாரணம்
"வரம் மனம் இல்லையா முருகா
வரம் தர மனமில்லையா--- என்னிடம்
வரம் மனம் இல்லையா....
இது போன்ற பாடல்களை இடலாம் என்று இருக்கிறேன்.

நாமக்கல் சிபி April 01, 2007 8:29 AM  

//வரம் மனம் இல்லையா முருகா
வரம் தர மனமில்லையா--- என்னிடம்
வரம் மனம் இல்லையா....
இது போன்ற பாடல்களை இடலாம் என்று இருக்கிறேன்.
//

அவசியம் இடுங்கள் தி.ர.ச அவர்களே!
அதற்காகத்தானே இந்த வலைப்பூவே!

VSK April 01, 2007 10:04 AM  

வாவென அழைக்காமாலே வருபவனை, வா, வா என குழைந்து அழைக்கும் பாடல் கேட்டு மனம் களித்தேன்.
நன்றி, ஐயா!

ஷைலஜா April 01, 2007 2:44 PM  

முதல்முறையாகக் கேட்கிறேன்..அழகு இனிமை அருமை..நன்றி திராச.
ஷைலஜா

G.Ragavan April 02, 2007 1:21 PM  

ஆகா! செங்கரும்பின் சாற்றில் செம்மலரின் தேனூற்றி அதன் இனிமையை மொழியாக்கி இசையாக்கி முருகப் பெருமானுக்கு மாலையாக்கிக் கொடுத்தவர்களும் அந்த மாலையை இங்கே கொடுத்த தி.ரா.ச விற்கும் நன்றி பல. இப்படி அடிக்கடி எங்களைத் திக்குமுக்காட வைக்கும் படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தி. ரா. ச.(T.R.C.) April 02, 2007 1:26 PM  

@விகேஸ் வரவுக்கு நன்றி.கூவி அழைத்தாலும் குழைந்து அழைத்தாலும் ஒடோடி வருவான் முருகன் பக்தர் குறைதீர்க்க கன்றின் தாய்ப் பசுபோல

தி. ரா. ச.(T.R.C.) April 02, 2007 1:28 PM  

@ஷைலஜா எத்தனை முறைகேட்டாலும் அலுக்காது முருகன் பாடல்கள். நன்றி

தி. ரா. ச.(T.R.C.) April 02, 2007 1:31 PM  

ஆஹா வா முருகா வா வடிவழகா என்று பாடினால் அது ராகவனை அழைத்துக்கொண்டு வந்து விட்டதே.நன்றி ஜி ரா.இனிப் பலப்பாடல்கள் வரும்

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP