Saturday, March 10, 2007

கலியுக வரதன் காட்சியளிப்பது பழனியிலே!நண்பர் ப்ரசன்னா இப்பாடலை முருகனருள் பதிவில் இடுமாறு சொல்லி மின்னஞ்சலில் பாடல் வரிகளையும் பாடலின் சுட்டியையும் அனுப்பியிருந்தார். இப்போது தான் பதிவில் இட நேரம் கிடைத்தது. மிக அருமையான பாடல்.

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் (கலியுக)

பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள், சௌம்யா
ஆக்கம் : பெரியசாமி தூரன்
ராகம் : ப்ருந்தாவன சாரங்கா
தாளம் : ஆதி

25 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) March 10, 2007 3:57 PM  

குமரா!
ஆண்டியாய் நின்றாலும் வேண்டியதை வழங்கும் ஆண்டவன் அவனல்லவா"
மிக அருமையான பாடல்;பம்பாய் சகோதரிகள் பாடும்போது
ஆரம்பத்திலேயே வயலின் பிரமாதமாக இசைக்கிறது.
நன்றி

குமரன் (Kumaran) March 10, 2007 4:05 PM  

ஆமாம் ஐயா. நானும் அதனை விரும்பிக் கேட்டேன். எந்த இசைக்கருவி என்ற அளவிற்குக் கவனிக்கவில்லை. ஆனால் இசை நன்றாக இருக்கிறது என்று உணர்ந்தேன்.

ஆண்டியாய் நின்றாலும்
வேண்டியதை வழங்கும்
ஆண்டவன் அவனல்லவா?

ஆகா. அருமையான வரிகள். ஐயா. இது ஏதாவது பாடலில் வரும் வரிகளா? நீங்கள் பின்னூட்டத்திற்காக எழுதிய வரிகளா? பின்னூட்டத்திற்காக எழுதியது என்றால் எதுகை மோனையுடன் மிக நல்ல கவிதையாக வந்திருக்கின்றன இந்த வரிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) March 10, 2007 4:23 PM  

அன்புக் குமரா!!
எனக்கெல்லாம் இப்படி எழுதவருவதில்லை. எல்லாம் கேட்டதுதான்!
இது ஒரு பக்திப்பாடல்; யார் பாடியதென்பது சரியாக ஞாபகம் இல்லை.
முருகன் அடியார்கள் கூறுவார்கள்...
அடுத்து கச்சேரிகளில் வயலினைப் பக்கவாத்தியமாக இல்லாமல்;சில பாடகர்கள்
பக்கா வாத்தியமாக ஒலிக்கவிடுவார்கள்; அப்படிப்பட்ட பாடகர்களை எனக்கு
மிகப் பிடிக்கும்.
இங்கே பக்காவாக ஒலிப்பது வயலினே!!!

தி. ரா. ச.(T.R.C.) March 10, 2007 11:27 PM  

அருமையான பாடல்.திரு.தூரன் அவர்கள் முருகன் பேரில் பல பாடல்கள் பாடியுள்ளார்.எல்லாப் பாடல்களும் இனிமையானவை.குறிப்பாக இந்தப்பாடலில் முருகனின் பிறப்பை சிறப்பாக விளக்குகிறார்
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
முக்கண்ணனான சிவனின் கண்களிலிருந்து உருவானவன்.
கார்த்திகை பெண்களால் நேர்த்தியாய்
வளர்ந்தவன்

பாடலை அளித்தமைக்கு நன்றி குமரன்

இலவசக்கொத்தனார் March 11, 2007 1:31 AM  

நல்ல பாடல். முருகன் காஸ்ட்யூம்தான் சிலர் கண்ணை உறுத்தலாம். :))

G.Ragavan March 11, 2007 6:14 AM  

பெரியசாமிதூரன் எழுதிய அருமையான பாடல். இந்தப் பாடலைக் கல்யாணிமேனன் பாடக் கேட்டிருக்கிறேன்.

பழநி என்றதும் நினைவிற்கு வருவது "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" என்ற சூலமங்கலம் பாடல்.

Prasannaa March 12, 2007 3:04 AM  

பாடலை பதிவிட்டதற்கு நன்றி குமரன்.

குமரன் (Kumaran) March 12, 2007 7:22 AM  

ஆமாம் திராச. மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்; மரகத வண்ணனாம் திருமால் மருகன் போன்ற அடிகளையும் விரும்பிப் படித்தேன்; கேட்டேன்.

எளிய இனிய பாடல்.

குமரன் (Kumaran) March 12, 2007 7:23 AM  

முருகனின் உடையை என்ன இப்போது தான் முதன் முதலில் பார்க்கிறார்களா கொத்ஸ்? பார்க்கும் கண் கொண்டு பார்த்தால் எல்லாவற்றிலுமே நல்லது தெரியும்; வேறு கண் கொண்டு பார்த்தால் கெட்டதும் தெரியும். இல்லையா? :-)

குமரன் (Kumaran) March 12, 2007 7:26 AM  

இராகவன். அந்தப் பாடலும் நல்ல பாடல். முருகனருளில் நீங்கள் இடலாமே?!

பழனி, பழநி எது சரி?

எனக்குப் பழனி என்றால் நினைவிற்கு வருவது சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் பழனிக்குச் சென்று நானும் தம்பியும் யானையடிப் பாதையில் நாங்கள் மட்டும் மேலும் கீழுமாகச் சென்று வந்தது தான். :-)

குமரன் (Kumaran) March 12, 2007 7:26 AM  

பாடலை எழுதி அனுப்பியதற்கு நன்றி பிரசன்னா.

வல்லிசிம்ஹன் March 12, 2007 8:04 AM  

மற்றவர்கள் பாடுவதைவிட பம்பாய் சகோதரிகள் குரல் எப்போதுமே எடுப்பாகத் தெரியும்.

முருகனே அழகு. அதில் இந்தப் பழனி ஆண்டவன் கம்பீரம் பார்க்கத் திகட்டாது.
நின்று நின்று கால் வலிக்குமே உட்கார்ந்துகொள் என்று சொல்லலாமானு தோன்றும்.

தெய்வம் படத்தில் பாடின பாடலும், கந்தரலங்காரம் படத்தில் அதே இருவரும் பாடிய பாடலும் சிறப்பாக இருக்கும்.

இலவசக்கொத்தனார் March 12, 2007 9:22 AM  

//கண்ணுதற் கடவுளின் //

விளக்கம் ப்ளீஸ். நான் இவ்வளவு நாள் கண் முதற் கடவுள் அப்படின்னு நினைச்சேன்.

குமரன் (Kumaran) March 12, 2007 12:53 PM  

ஆமாம் வல்லியம்மா. பம்பாய் சகோதரிகளின் பாணியே அப்படி தான். கணீரென்று இருக்கும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தவுடன் எனக்குச் சிறு வயதில் மலையிலேயே நாள் முழுதும் தங்கி மீண்டும் மீண்டும் சென்று பல முறை பல்வேறு அலங்காரத்துடன் முருகனைத் தரிசித்தது நினைவிற்கு வருகிறது. ஒவ்வொரு கோலத்தையும் கண்டு அங்கேயே நிற்போமே. கண் கொள்ளா காட்சி.

குமரன் (Kumaran) March 12, 2007 12:54 PM  

கொத்ஸ். ரொம்ப எளிதான சொல் அது. கண்ணுதல் - கண் + நுதல் = கண் + நெற்றி; நெற்றிக்கண்ணன் தான் கண்ணுதற்கடவுள்.

இலவசக்கொத்தனார் March 12, 2007 2:27 PM  

//கண்ணுதல் - கண் + நுதல் = கண் + நெற்றி; நெற்றிக்கண்ணன் தான் கண்ணுதற்கடவுள்.///

உண்மையிலேயே எனக்குத் தெரியாத விஷயம்தான். நன்றி குமரன்!

SK March 12, 2007 10:06 PM  

இதுக்குத்தான் இளையராஜாவின் திருவாசகம் கேக்கணுங்க, கொத்ஸ்!

"கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி"

அப்படீன்னு சிவபுராணத்தில் வரும்!
:))

செல்லி March 12, 2007 11:27 PM  

ஆமாம், //வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் // அனுபவத்தில் கண்டேன்.
அழகன் முருகனின் அருளே அருள்தான்.
நல்ல பாடல்.
நன்றி

குமரன் (Kumaran) March 13, 2007 9:48 PM  

உண்மை செல்லி. கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே.

இலவசக்கொத்தனார் March 13, 2007 10:21 PM  

//இதுக்குத்தான் இளையராஜாவின் திருவாசகம் கேக்கணுங்க, கொத்ஸ்!//

அப்போ மட்டும் விளக்கம் ப்ளீஸ் அப்படின்னு கேட்க மாட்டோமா என்ன? தெரிஞ்சா திருவாசகத்திலும் தெரியும், பெரியசாமி தூரனிலும் தெரியும். தெரியலைன்னா எங்கயுமே தெரியாது!! :)

வெற்றி March 24, 2007 1:57 PM  

குமரன்,
நல்லதொரு பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கும் பிரசன்னாவிற்கும் மிக்க நன்றிகள்.

குமரன் (Kumaran) March 24, 2007 2:35 PM  

நன்றி வெற்றி.

மலைநாடான் March 24, 2007 2:57 PM  

குமரன்!

மிக அருமையான பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) March 24, 2007 5:23 PM  

நன்றி மலைநாடான்.

Pattabi Raman March 11, 2018 11:40 AM  

I tried this song in my Mouthorgan. The link is given below


blob:https://www.youtube.com/54af9662-84f7-4a70-92fd-c642297d647b

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP