Saturday, February 03, 2007

025: முருகா முருகா முருகா வா!

22 Nov 2016
அமரர். பாலமுரளி கிருஷ்ணா, தாமே எழுதி + பாடிய, முருகன் பாடல்!

 

முருகா முருகா முருகா வா!
மோகன குஞ்சரி பதியே வா!
முருகா முருகா முருகா வா!

மறைகளின் மூலப் பொருளினை ஓதி
பரசிவன் குருவான ஞானவரா - பேர்
அருள் நிறை விழியிலே அன்பு கொண்டிட வா
முருகா முருகா முருகா வா!

குன்று தோறாடும் குகனே வாராய்
குறை அகற்றிடும் சிவகுமரனே வாராய்
வென்றிட வல்வினை வேருடனே என் முன்
முருகா முருகா முருகா வா!

பெரும் இசை வித்தகர் திரு.பாலமுரளிகிருஷ்ணாவே இயற்றிப் பாடிய பாடல் இது.

இராகம்: குந்தளவராளி
தாளம்: ஆதி

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்
(Changed the link to https://www.youtube.com/watch?v=f84-_28phLk )

***

அருஞ்சொற்பொருள்:

குஞ்சரி - தெய்வயானை
மறைகளின் மூலப்பொருள் - ஓம்காரம்
ஞானவரா - ஞானத்தில் சிறந்தவன்

16 comments:

சிவபாலன் February 03, 2007 7:52 PM  

குமரன் சார்,

பதிவுக்கு நன்றி!

கோவி.கண்ணன் February 03, 2007 11:44 PM  

//சிவபாலன் வெ said...
குமரன் சார்,

பதிவுக்கு நன்றி!
//

சிவ பாலன் ஆத்திக பதிவுகளை தேடி தேடி படித்துப் பாராட்டுவது வியப்பளிக்கிறது.
:)

முருகன் ஒரு சிவபாலன் என்பதால் படிக்கிறாரோ ?
:)))

குமரன் (Kumaran) February 04, 2007 12:38 AM  

வருகைக்கு நன்றி சிவபாலன் & கோவி.கண்ணன் அண்ணா.

Unknown February 10, 2007 5:16 PM  

Thanks for the song kumaran.

Kannabiran, Ravi Shankar (KRS) February 12, 2007 11:56 AM  

குமரன்

பாலமுரளி வாக்யேக்காரரா?
அவர் மற்ற பாடல்களையும் தாருங்களேன்;
சந்தானம் முருகன் மீது இயற்றிப் பாடிய பாடல் ஒன்று உள்ளது; அடியேன் இட முனைகிறேன்!

குந்தளவராளி = குந்தளம் என்றால் என்னவோ?

G.Ragavan February 12, 2007 12:01 PM  

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்

பாலமுரளி வாக்யேக்காரரா? //

அப்படியென்றால்?

// அவர் மற்ற பாடல்களையும் தாருங்களேன்;
சந்தானம் முருகன் மீது இயற்றிப் பாடிய பாடல் ஒன்று உள்ளது; அடியேன் இட முனைகிறேன்! //

காத்திருக்கிறோம்

// குந்தளவராளி = குந்தளம் என்றால் என்னவோ? //

குந்தளம் என்றால் கூந்தல் என்று பொருளும் உண்டு. மஞ்சு நிகர் குந்தளம் என்று அண்ணாமலைக் கவிராயர் எழுதியிருக்கிறாரே.

G.Ragavan February 12, 2007 12:09 PM  

முருகா முருகா முருகா வாயெனச் சொல்லும் வாயும் தொழுதிடும் கையும் உழுதிடும் நெஞ்சமும் கொண்டார்க்குத் தஞ்சம் எனத் தந்தண் கஞ்சம் தரும் கதிர்வேலன் பாவைப் படிப்பதில் கேட்பதில் மெத்த மகிழ்ந்தேன் குமரன். சொல்லச் சொல்ல இனிக்குதடா என்றார். நினைக்க நினைக்க உருக்குதடா என்றார். படிக்கப் படிக்கப் பெருகுதன்பென்பேன் நான்.

குமரன் (Kumaran) February 13, 2007 5:19 PM  

நன்றி செல்வன்.

குமரன் (Kumaran) February 13, 2007 5:24 PM  

இரவிசங்கர். பாலமுரளிகிருஷ்ணா வாக்யேயக்காரர் என்பது இந்தப் பாடலைக் கேட்கும் போது தான் தெரியும். ஆனால் பல்துறை வித்தகரான அவர் வாக்யேயக்காரராகவும் இருப்பது வியப்பில்லையே?

முருகா என்று தேடிய போது கிடைத்தப் பாடல் இது இரவிசங்கர். அவர் இயற்றிய மற்ற பாடல்கள் எனக்குத் தெரியாது.

குந்தளம் என்பதற்கு இராகவன் சொன்ன கூந்தல் என்பது முதற்பொருள். இன்னொரு பொருள் - சளுக்கர்களின் நாட்டிற்கும் குந்தள நாடு என்று பெயர். வராளி என்றால் என்ன என்று கேட்காதீர்கள். தெரியாது. வராளி என்று தேடியதில் அப்படி முடியும் இராகங்கள் பல இருப்பது தெரிந்தது. அவ்வளவு தான். :-)

குமரன் (Kumaran) February 13, 2007 5:29 PM  

இராகவன்.

கர்நாடக இசைப்பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றுபவரை வாக்யேயக்காரர் என்று சொல்லுவார்கள்.

பெருகிய அன்பால் பெருகிய சொல்மாலையைக் கண்டேன். மகிழ்ந்தேன்.

Roop March 24, 2007 7:54 AM  

Dear Sir, it is happy to see Murugan pictures and also very rare arts of Lorg Muruga. Thanks and continue your posts.
Yours
Rooop (www.mgrroop.blogspot.com)

வெற்றி March 24, 2007 2:03 PM  

குமரன்,
பாடலுக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) March 24, 2007 2:34 PM  

நன்றி ரூப் & வெற்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) March 24, 2007 4:58 PM  

குமரன்!
சௌந்தரராஜன் பாடிய பக்திப் பாடல்; மிகப் பழையது;" முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா! எனக் கேட்டுள்ளீர்களா? அது வேறு மெட்டு!!
இப்பாடல் இப்போதே கேட்டேன். வித்துவான் பாலமுரளியின் குரலில் தனி நளினம் மிளிரும்.
தேடியிட்டதற்கு நன்றி!

குமரன் (Kumaran) March 24, 2007 5:00 PM  

யோகன் ஐயா. நீங்கள் சொல்லும் டி.எம்.எஸ். பாடல் மிகப் பிரபலமான பாடல் ஆயிற்றே. பல முறை கேட்டிருக்கிறேன். பாடியிருக்கிறேன்.

Sethu Subramanian May 28, 2017 12:51 PM  

வேருடனே ---> வேலுடனே (with spear)
Is this song from a movie or just an album?
I very much doubt that the composer is BMK. He always affixes his signature (mudra) "muraLi" in all his compositions. This song does not have any mudra.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP