Sunday, October 29, 2006

012: நீயே சரண் ஷண்முகா


நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீயே சரண் ஷண்முகா - கருணை நிதி
நீ அருள்வாய் என நான்
நின் அடிமைக்கு (நீயே சரண்)

சேய் யாரிடமும் செல்லுமோ - ஈன்ற
தாய் அல்லால்
திருமால் மருகனே
வடிவேல் முருகனே (நீயே சரண்)

சுவாமிநாத மாமயூர வாஹ
சங்கர கௌரி குமார விசாக
ராமதாசன் பணியும் குஹா
சுரராச பூஜித வர முருகா (நீயே சரண்)

பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
இராகம்: காம்போஜி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

6 comments:

நாமக்கல் சிபி October 31, 2006 6:38 AM  

பாடல் நன்றாக இருக்கிறது குமரன்.
மிக்க நன்றி!

வல்லிசிம்ஹன் October 31, 2006 8:15 PM  

இராமதாச பணி என்று வருகிறதே
குமரன்?

இவரும்(பாபனாசம் சிவன்) அவரும் ஒன்றா.
பாட்டுக் க்ஏட்டால் எப்படி இருக்கும்!!

குமரன் (Kumaran) October 31, 2006 10:47 PM  

நன்றி சிபி.

குமரன் (Kumaran) October 31, 2006 10:49 PM  

அப்படித் தான் நினைக்கிறேன் வல்லியம்மா. இராமதாசன் என்பது பாபனாசம் சிவன் அவர்களின் முத்திரை என்று நினைக்கிறேன். அதனைத் தான் கடைசியில் வைத்து எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒன்று இராமதாசன் என்பது பாபனாசம் சிவனாக இருக்க வேண்டும்; இல்லை அவரது குருநாதராக இருக்க வேண்டும். சில சாகித்ய கர்த்தாக்கள் தங்களது குருவின் பெயரை முத்திரையாக இடுவதையும் கண்டிருக்கிறேன்.

பாடலைக் கேட்கலாமே அம்மா. உன்னிகிருஷ்ணனின் பெயரில் அந்த சுட்டியிருக்கிறது. சுட்டியை அழுத்துங்கள். பாடலைக் கேட்கலாம்.

G.Ragavan November 03, 2006 3:03 AM  

கருணைநிதி என்று பார்த்ததும் ஏதேனும் அரசியல் பதிவோ என நினைத்தேன். நல்லவேளை. :-)

பாபநாசம் சிவன் கிருதிகளைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். கா வா வா போன்ற சில பாடல்களைக் கேட்டுள்ளேன். இந்தப் பாடல் இப்பொழுதுதான்.

மொத்த வரிகளிலேயே மூன்று வரிகள்தான் தமிழில் பயின்று வருகிறது. வடமொழிப் பழக்கம் அவருக்கு மிகச் சிறப்பாக உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வல்லிக்கு ஏற்பட்ட ஐயம் எனக்கும் எழுந்துள்ளது. அதென்ன ராமதாசன் பணியும் குஹா? அது அவரைக் குறிக்குமா என்று தெரியவில்லை. தி.ரா.ச-விற்கு சிவனின் கிருதிகளில் நல்ல பழக்கமுண்டு. அவரைக் கேட்டால் தெரியலாம்.

Johan-Paris November 03, 2006 7:43 AM  

Composer’s bio:

Papanasam Sivan (1890-1973) was born as Ramaiah in Polagam in Thanjavur district. He spent a lot of time with his older brother in Papanasam (near Kumbakonam). It was common in the early 20th century to confer the title of Sivan on men of God. Thus he acquired the name, ‘Papanasam Sivan’. He was influenced greatly by nIlakaNTa Sivan (another great composer) in his early life for a couple of years. He also drew inspiration from Gopalakrishna Bharathi. He did not have a traditional musical curriculum but learnt music occasionally from several musicians. Konerirajapuram Vaidyanatha Iyer served as his mentor and sponsor in his adult life.

He was committed to Thamizh, Thamizh music and the freedom movement. He composed around 2,500 songs (mainly devotional, and occasionally social and national themes) and performed in several theatrical productions. He was a teacher at the famed Kalakshetra during 1934-39. He composed classical music for several movies and also acted in four movies. He composed mainly in Thamizh but also penned a few compositions in Sanskrit and Telugu. He used the signature ‘Ramadasan’. But many of his compositions did not contain his signature, including the song discussed here.
குமரா!
நல்ல பாடலொன்று! உன்னியின் இனிய குரல் மெருகேற்ருகிறது.
இந்த ராமதாசன் எனும் முத்திரை; பாவநாசம் சிவனாரதே!!!ஆனால் இது அவர் குருவின் பெயரல்ல. அவர் பல பாடல்களில் உண்டு. முத்துசுவாமி தீட்சிதர் "குரு குக" என முத்திரை வைத்துள்ளார்.
யோகன் பாரிஸ்

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP