Monday, September 18, 2006

004. வருவான் வடிவேலன்

Photobucket - Video and Image Hosting

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன் (வருவான்......

சிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்
அவள் செங்கனி வாயிதழை நனைக்கின்றவன் (சிரித்துக்.....
இடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்
அள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (ஆஆஆஆஆஆ...இடையினில்...

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

அடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன்
என்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்
கொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்
சேவல் கொடியனவன் நமக்கு இனியனவன் (கொடியவர்.....

வருவான் வடிவேலன்
தணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்

திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
திருமுருகாற்றுப்படை நான் பாடவா
இல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா
கந்தர் சஷ்டிக் கவசக் கதை பாடவா
அவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா (வருவான்.....


பாடியவர் : வாணி ஜெயராம்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்தவர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
திரைப்படம் : வருவான் வடிவேலன்
முருகன் படம் நன்றி
www.murugan.org

10 comments:

VSK September 18, 2006 1:53 PM  

அருமையான கவியரசரின் பாடலுக்குப் பொருத்தமான படம் போட்டு, முருகன், வள்ளியுடன் மயில் மீது வருவதை அப்படியே காட்டியதற்கு, நன்றி, ஜி.ரா.

தி. ரா. ச.(T.R.C.) September 18, 2006 4:15 PM  

அருமையான படம்.அருமையான் பாடல்.பாட்டுக்கும் சுட்டி கொடுத்து இருக்கலாம்.

குமரன் (Kumaran) September 18, 2006 7:01 PM  

பாடலின் ஒலிவடிவையும் கொடுத்தால் கேட்டு மகிழலாமே இராகவன்.

Kannabiran, Ravi Shankar (KRS) September 18, 2006 11:15 PM  

// குமரன் (Kumaran) said...
பாடலின் ஒலிவடிவையும் கொடுத்தால் கேட்டு மகிழலாமே இராகவன். //

குமரன் கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா? சிவனாராலேயே அது முடியாதே! இதோ சுட்டி
http://ds06.cooltoad.com/music/send.php?id=258288&name=VaruvanVadivelan-VaruvanVadivelan.mp3&token=song.258288.450f5d88f304a0d5

கற்றலின் கேட்டலே நன்று; நல்ல பரதநாட்டியப் பாடல்; இனித்தது!!

Kannabiran, Ravi Shankar (KRS) September 18, 2006 11:23 PM  

//கொடியனவன்
சேவல் கொடியனவன்
நமக்கு இனியனவன்//

இது இது..."கொடியனவன்" என்று கண்ணதாசன் சிலேடையைப் போட்டு விளையாடராரு!

ஜிரா...அந்தப் படம் எங்கு கிடைத்தது?
அந்தக்கால ஆயில் பெயிண்டிங்கோ?
அதைப் பார்த்தவுடன், புதுசாக் கல்யாணமான பொண்ணு, தன் கணவனைக் கட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் போவது போலவே இருந்தது.
என்ன பொதுவா பெண்கள் ஸ்கூட்டரில் பின்னே. இங்க நம்ம வள்ளியம்மை, மயிலின் முன்னே!:-)

Kannabiran, Ravi Shankar (KRS) September 19, 2006 12:00 AM  

ஜிரா

முருகனும் வள்ளியும் தனியா இருக்கும் போது உங்க மயிலாருக்கு அங்க இன்னா வேலை? அதுவும் தோகைய நல்லா வேலை விட ஒசரமா விரிச்சிக்கினு? :-)
நீங்க ஒண்ணும் கேட்டுக்கறது இல்லையா? எல்லாம் நீங்க கொடுக்கற எடம் :-(

G.Ragavan September 19, 2006 12:32 AM  

// SK said...
அருமையான கவியரசரின் பாடலுக்குப் பொருத்தமான படம் போட்டு, முருகன், வள்ளியுடன் மயில் மீது வருவதை அப்படியே காட்டியதற்கு, நன்றி, ஜி.ரா. //

நன்றி எஸ்.கே. அடுத்து நீங்கள்தான் பாடலும் படமும் கொடுக்க வேண்டும். காத்திருக்கிறோம்.

// தி. ரா. ச.(T.R.C.) said...
அருமையான படம்.அருமையான் பாடல்.பாட்டுக்கும் சுட்டி கொடுத்து இருக்கலாம். //

தி.ரா.ச, குமரனும் இதைத்தான் கேட்டிருக்கிறார். உடனே ரவி பாடலுக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறார். கேட்டு மகிழுங்கள். மிகச் சிறந்த பாடல் இது.

G.Ragavan September 19, 2006 12:39 AM  

// ஜிரா...அந்தப் படம் எங்கு கிடைத்தது?
அந்தக்கால ஆயில் பெயிண்டிங்கோ?
அதைப் பார்த்தவுடன், புதுசாக் கல்யாணமான பொண்ணு, தன் கணவனைக் கட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் போவது போலவே இருந்தது.
என்ன பொதுவா பெண்கள் ஸ்கூட்டரில் பின்னே. இங்க நம்ம வள்ளியம்மை, மயிலின் முன்னே!:-) //

ரவி, படம் கிடைத்த தளத்தையும் போட்டிருக்கிறேனே. மிக அழகான படம். நானும் ரசித்துத்தான் இட்டேன். இது 1920-40க்குள் வரையப்பட்ட ஓவியம் என்ற அளவுக்குத்தான் எனக்கு விவரம் தெரியும்.

வெற்றி September 19, 2006 1:16 AM  

இராகவன்,
நல்ல பாடல். நானும் நண்பர் குமரன் கேட்டது போல் "பாடலின் ஒலிவடிவையும் கொடுத்தால் கேட்டு மகிழலாமே" என கேட்டுக்கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) September 19, 2006 1:58 AM  

mp3 சுட்டி சரியாக இயங்க வில்லை என்றால், இதோ மூலப் பக்கத்துக்கான சுட்டி
http://music.cooltoad.com/music/song.php?id=258288

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP