Tuesday, September 12, 2006

002 : சொல்லாத நாளில்லை..சுடர்மிகு வடிவேலா..!

Photobucket - Video and Image Hosting


பாடல்: சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்




சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !

நன்றி : கோ.கணேஷ், கோவில்பட்டி

9 comments:

G.Ragavan September 12, 2006 1:35 PM  

முருகனைச் சொல்லாத நாளில்லை
எண்ணாத நாளில்லை
கல்லிலும் சொல்லிலும் ஆன்றோர் வடித்ததைக் கண்ணிலும் கருத்திலும் கொள்வதே கடமை என்று கொள்வதே பெருமை!

MSV Muthu September 14, 2006 9:45 PM  

வாவ். முருகனுக்கு ஒரு பளாக். அருமை. முருகனின் பெருமையை சொல்லி மாளாது. எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாடலில் இதுவும் ஒன்று. ஆனால் என்னுடைய பேவரிட் சீர்காழி கோவிந்தராஜன் தான். மிக மிக நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) September 15, 2006 9:15 AM  

ராகவா!
எங்க ஊர்;முருகன் கோவிலில்; என் இளமைக்காலத்தில் நல்லையா அண்ணன் என்னும்;ஒலிபெருக்கி வாடகைக்கு விடுபவர்; போடும் முதற்பாடல்; காலம் பூராகவும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். இதை எழுதியவர் யாரெனத்திரியுமா?
யோகன் பாரிஸ்

வெற்றி September 15, 2006 1:38 PM  

இராகவன்,
நல்லதொரு முயற்சி. தொடருங்கள். நானும் ஒரு முருக பக்தன் என்பதால் தங்களின் பதிவைப் பார்த்ததும் மனது பேருவகை அடைகிறது. வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் October 31, 2006 8:12 PM  

குமரன்,

இந்தத் தொகுப்பில் உள்ள பாடல்கள் அத்தனையும் அமிர்தம்.
தமிழும் முருகனும் சேர்ந்தால்,

கேட்கப் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
நன்றி.

வசந்த் November 06, 2006 12:34 AM  

அருமையான பணி. இந்த பாடலை முனுமுனுக்கும் போதெ உள்ளம் உருகுவதை உணர முடிகிறது. இந்த தளம் என் போன்ற முருக பக்தர்களுக்கு மிகச் சிறந்த பிரசாதமாக அமையும் என நம்புகின்றேன்.

மிகவும் நன்றி.
முருகன் அருள் என்றும் நாடும்
வசந்த்.

லதா November 07, 2006 4:46 AM  

அன்புள்ள முருகன் அடியார்களுக்கு,
என்னிடம் டி.எம்.எஸ்.அவர்கள் பாடிய சில முருகன் பக்திப்பாடல்கள் எம்ப்பி3 வடிவில் உள்ளன. அவற்றை தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாமா ?

குமரன் (Kumaran) November 07, 2006 2:42 PM  

மிக்க நன்றி லதா. என்னுடைய ப்ரொபைலில் என்னுடைய மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. நிறைய டி.எம்.எஸ். பாடல்கள் வலையிலேயே கிடைக்கின்றன. நீங்கள் அனுப்புவதில் ஏதாவது புதிதாக இருந்தால் உங்களது எம்பி3யைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

Unknown June 18, 2019 8:00 PM  

என்ன இராகம்?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP